அர்காடே டெவலப்பர்ஸ் ஐபிஓ ஒதுக்கீட்டு தேதி




அர்கேட் டெவலப்பர்ஸ் ஐபிஓவில் பங்குகள் ஒதுக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம் ரூ.410 கோடிக்கு ஐபிஓ வெளியிட்டது. இதற்கு 106.40 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் வரப்பெற்ற நிலையில், ஐபிஓ வெளியீடு வெற்றி பெற்றுள்ளது. செப்டம்பர் 20ம் தேதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. பிஎஸ்இ மற்றும் என்எஸ்இயிலும் பங்குகள் பட்டியலிடப்படவுள்ளது.