எதிர்காலத்தை பாதுகாப்பதே எதிர்கால தலைமுறையின் கவலை




பணி ஓய்வுக்கு ஒருவர் தயாராக அவரது வாழ்க்கையில் இது மிக முக்கியமான நேரம். தற்போதைய வேலையில் நாம் சம்பாதிப்பதை விட நாளை சம்பாதிப்பது முக்கியம். சேமிப்பு, முதலீடு மற்றும் காப்பீடு மூலம் ஓய்வுக்குப் பிறகு நமக்கான நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.
உங்கள் எதிர்காலத்தைச் சிறப்பாகச் செய்ய இந்திய அரசு ஜனவரி 1, 2004 அன்று ஒரு ஓய்வுகால சேமிப்புத் திட்டத்தை உருவாக்கியது. இந்தத் திட்டத்திற்கு தேசிய ஓய்வூதிய அமைப்பு (என்பிஎஸ்) என்று பெயரிடப்பட்டது. ஆரம்பத்தில், இந்தத் திட்டம் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது. ஆனால் பின்னர், மே 1, 2009 முதல், எல்லா குடிமக்களுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தியது இந்திய அரசு. என்பிஎஸ் திட்டத்தின் கீழ், நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்து ஓய்வுக்குப் பிறகு ஒரு பெரிய தொகையைப் பெறலாம்.
இப்போது என்பிஎஸ் திட்டத்தின் ஒரு சிறிய பதிப்பை இந்திய அரசு தொடங்கி உள்ளது. என்பிஎஸ் வத்சல்யா திட்டம் என்று அழைக்கப்படும் இத்திட்டம் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு ஓய்வூதியத் திட்டமாகும். இதன் மூலம் இந்தத் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படுகிறது.
என்பிஎஸ் வத்சல்யா திட்டம்
இந்தத் திட்டம் இந்தியாவின் மத்திய அரசு ஊழியர்களுக்காக இந்திய அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கி, தொடர்ந்து பணம் டெபாசிட் செய்யலாம். குழந்தை 18 வயதை எட்டிய பின் அந்தத் தொகையை எடுக்கலாம்.
யார் விண்ணப்பிக்கலாம்?
இந்தத் திட்டத்தின் கீழ் 18 வயதுக்குட்பட்ட எந்தக் குழந்தையும் விண்ணப்பிக்கலாம். குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் குழந்தையின் பெயரில் கணக்கு தொடங்கி பணம் டெபாசிட் செய்யலாம்.
எவ்வளவு டெபாசிட் செய்யலாம்?
குழந்தையின் பெயரில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 டெபாசிட் செய்யலாம். அதிகபட்சமாக எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம் என்பதற்கு எந்த வரம்பும் இல்லை.
நிதி எப்போது கிடைக்கும்?
குழந்தை 18 வயதை எட்டியவுடன் என்பிஎஸ் வத்சல்யா திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்த பணத்தை எடுக்கலாம்.
வர விலக்கு
என்பிஎஸ் வத்சல்யா திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80சிசிடி (1பி) இன் கீழ் வரிச் சலுகை கிடைக்கும்.
குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பரிசு?
நம் குழந்தைகளின் எதிர்காலம் நம் கையில் உள்ளது. என்பிஎஸ் வத்சல்யா திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்கவும்.