கண்களைப் பிரகாசிக்க வைக்கும் அற்புதமான காஜல்




கண்களே முகத்தின் கண்ணாடிகள் என்கிறார்கள். கண்களின் அழகுக்கு பங்கம் வந்து விடக்கூடாது என்பதில் பெரும்பாலான பெண்கள் மிகவும் கவனம் செலுத்துகிறார்கள். அதற்காக பல்வேறு வகையான கண் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அவற்றில் காஜலுக்கும் தனி இடம் உண்டு. கஸ்தூரி மஞ்சள், வெல்லம், பச்சை கற்பூரம் போன்றவை சேர்த்து செய்யப்படும் இந்த காஜல், கருமையுடன் கூடிய பொலிவை கண்களுக்கு அளிக்கிறது. அழகிய பார்வையை தருவதற்கு காஜல் உதவும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதை எப்படி தயாரிப்பது என்பது பெரும்பாலும் மக்களுக்கு தெரிவதில்லை. காஜல் தயாரிக்கும் முறை இங்கே தரப்பட்டுள்ளது.

  • தேவையான பொருட்கள்
  • கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்
  • பச்சை கற்பூரம் - 100 கிராம்
  • வெல்லம் - 100 கிராம்
  • நெய் - 50 மி.லி.
  • செய்முறை
  • முதலில் கஸ்தூரி மஞ்சளை எடுத்து சுத்தம் செய்து வறுத்துக் கொள்ளவும்.
  • அதனுடன் பச்சை கற்பூரத்தை பொடியாக்கி சேர்த்துக் கொள்ளவும்
  • பிறகு வெல்லத்தை பொடி செய்தும் சேர்த்துக் கொள்ளவும்
  • இவை மூன்றையும் நன்றாக கலந்து கொள்ளவும்
  • இந்த கலவையுடன் 50 மி.லி நெய் சேர்த்து நன்றாக கலந்து அரைக்கவும்
  • அரைத்து ஒரு தக்காளி குழம்பு பதத்திற்கு வந்ததும் அதை பஞ்சு சேலையில் வடிகட்டி எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொள்ளவும்
  • அதனை இரண்டு நாட்கள் வரை வெயிலில் வைத்து உலர்த்தவும்
  • உலர்ந்ததும் அதனுடன் சிறிது நெய் சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து கொள்ளவும்
  • இப்போது இந்த காஜல் தயார்

இந்த காஜல் முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் இயற்கையானது. இது கண்களில் எந்தவித எரிச்சலையும் ஏற்படுத்தாது. இது நீண்ட நேரം நீடிக்கும் மற்றும் கண்களுக்கு அழகிய பிரகாசத்தை அளிக்கும்.