தெலங்கானா வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா, தெலுங்கு திரையுலகில் தம்பதியாக இருந்த நாக சைதன்யா, சமந்தா இருவரின் விவாகரத்தை குறித்து தனது கருத்தை பகிர்ந்து கொண்டது சர்ச்சையை கிளப்பியது.
அமைச்சர் கொண்டா சுரேகா, "நாக சைதன்யா மற்றும் சமந்தா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு சமீபத்திய சட்டசபை தேர்தலில் நாக சைதன்யாவின் சகோதரி சுஷ்மிதா தோல்வி அடைந்த பின்னர் பி.ஆர்.எஸ் கட்சியின் செயலாளர் மற்றும் தெலங்கானா மாநில ஐ.டி. மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.டி.ஆர் தலையில் தட்டி திட்டியதே காரணம்" என கூறியிருந்தார்.
அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்துக்கு நாக சைதன்யா, சமந்தாவின் வழக்கறிஞர் இன்று அறிவிப்பு வெளியிட்டார்.
"நாக சைதன்யா, சமந்தா இருவரின் பெயரையும் இழுத்து அமைச்சர் கொண்டா சுரேகா அவர்கள் அபாண்டமாகவும் தவறாகவும் கருத்து கூறியுள்ளார். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பகிரங்கமாக பேசி அவமதித்துள்ளார். அவரது கருத்துக்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் முற்றிலும் பொய்யானவை. நாங்கள் அமைச்சர் கொண்டா சுரேகா மீது இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறோம்." என்று கூறினார்.