ஜான் டர்னர்
வழக்கமாக நம்மிடம் உடல்நலப் பிரச்சனை ஏற்பட வேண்டுமானால் நாம் சில காரியங்களை செய்யாமல் இருக்க வேண்டும். அல்லது தவறான காரியங்களை செய்துகொண்டிருப்பதால்தான் நம்மை நோய்கள் அடைகின்றன என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
அதேபோலத்தான் மனநலப் பாதிப்பும் நாம் சில காரியங்களை தவறாக செய்வதால்தான் நேர்கிறது. அதை ஒருமுறை பார்க்கலாம் என முடிவு செய்து, மனநல மருத்துவர் கோ.அருண் நேருவை அணுகினேன். எனக்கு கிடைத்த தகவல்களில் முக்கியமான சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
● ஒருநாள் முழுவதும் வீட்டை விட்டு வெளியே வராமல் தொடர்ந்து தூங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு வருங்காலத்தில் மனநிலை கோளாறுகள் உண்டாக வாய்ப்புகள் அதிகம்.
● எப்போதும் மனக் கவலைகளுடனும், மன அழுத்தத்துடனும் திரிபவர்களுக்கு வருங்காலத்தில் இருமுனை மனப்பான்மை கோளாறு (பைபோலார் டிஸ்ஆர்ட்டர்) பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
● எப்போதும் சோகமாக இருப்பதும், முட்டிக்கொண்டு அழுதுகொண்டிருப்பதும் சில வருடங்களில் மனச் சோர்வு பிரச்சனைக்கு (டிப்ரஷன்) கொண்டு செல்லும்.
● சாப்பிடாமல் இருப்பதும், அதிகமாக சாப்பிடுவதும் சில வருடங்களில் உணவு தொடர்பான பிரச்சனைகளுக்கு(இட்டிங் டிஸ்ஆர்டர்ஸ்) கொண்டு செல்லும்.
● கடந்த காலத்தின் தவறுகளை மனதில் நினைத்துக்கொண்டு, அதை நினைவுபடுத்திக்கொண்டு வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதினால் சில வருடங்களில் பீதி வியாதியை நோக்கி உங்களை எடுத்துச் செல்லும்.
● யாரிடமும் பேசாமல், தனிமையில் இருப்பவர்களுக்கு வருங்காலத்தில் தனித்து இயங்கும் மனநிலை பிரச்சனை (ஸ்கிஸோபிரீனியா ) வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
● கடந்த காலச் செயல்கள், தவறுகள் எதுவும் இல்லாமல் எப்போதும் எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளில் இருப்பவர்களுக்கு வருங்காலத்தில் பதட்ட நோய் (என்க்ஸைட்டி டிஸ்ஆர்ட்டர்) வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
● எதைச் செய்தாலும் சரியாக செய்ய வேண்டும், தவறு செய்யக்கூடாது என நினைத்து செயல்களில் தீவிரமாக இருப்பவர்களுக்கு வருங்காலத்தில் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாத பிரச்சனைகள் சில நோக்கி எடுத்துச் செல்லும்.
● மதுவுக்கு, சிகரெட்டுக்கு அடிமையாக இருப்பவர்களுக்கு வருங்காலத்தில் வெவ்வேறு விதமான மனநலப் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
● அதிக நேரம் கணினியுடனும், மொபைலுடனும் செலவிடுவோர் எதிர்காலத்தில் கவனம் குன்றிய குறைபாடு பிரச்சனையை (அட்டன்ஷன் டெஃபிசிட் டிஸ்ஆர்ட்டர்) சந்திப்பார்கள்.
இதுபோன்று சில காரியங்களை செய்யாமல் இருந்தாலோ, தவறாக செய்து கொண்டிருந்தாலோ மனநலப் பாதிப்புகள் சில நம்மை நோக்கி வரலாம். எனவே எப்போதும் நன்றாக இருங்கள்.
1. தினமும், ஒரே நேரம் தூங்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் மூளையும் உடலும் சீராக செயல்படும்.
2. மன அழுத்தத்தை குறைக்கும் நடை, தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
3. சமூகத்தில் தங்களை ஈடுபடுத்துதல், யாருடனாவது பேசுதல், சந்தோஷமாக இருப்பவர்களுடன் நேரத்தை செலவழித்தல் போன்ற பழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
4. சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். சத்தான உணவுகள் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
5. உடற்பயிற்சி அல்லது ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுதல் போன்ற நேரத்தை செலவிடும் செயல்களை வழக்கமாக செய்ய வேண்டும்.
6. யோகா அல்லது தியானம் போன்ற மன அமைதியை ஏற்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
7. தன்னம்பிக்கையுடன் இருத்தல், எல்லா சூழ்நிலைகளையும் தைரியமாக எதிர்கொள்ளல் போன்ற மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளவும்.
8. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவும் மையங்கள், மருத்துவர்கள் உதவியை பெறுதல் போன்ற செயல்களை மேற்கொள்ள வேண்டும்.
மன நலம், உடல் நலம் போலவே மிகவும் முக்கியம். இரண்டையும் சீராக வைத்துக் கொண்டால், வாழ்க்கை சிறப்பாக அமையும்.