மிர்சாபூர் படம்




பிரபலமான வெப்தொடரான "மிர்சாபூர்" திரைப்படமாக உருவாகிறது என்ற அறிவிப்பு, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • பூனீத் கிருஷ்ணாயால் உருவாக்கப்பட்டு, குர்மீத் சிங் இயக்கிய இந்தப் படத்தில், பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், டிவ்யேந்து சர்மா, அபிஷேக் பானர்ஜி ஆகியோர் நடிக்கின்றனர்.
  • 2026-ம் ஆண்டு இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த வெப்தொடர், வட இந்தியாவின் ஆழங்களில் நிலவும் குற்ற உலகத்தையும், அதிகாரப் போராட்டங்களையும் மையமாகக் கொண்டது. பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல் ஆகியோர் காலீன் பாய்யா, குட்டு பாய்யா என்ற கதாபாத்திரங்களில் நடித்து, மிரட்டினர்.

தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, திரைப்படமாக உருவாக்கப்படும் இந்த அறிவிப்பு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஆக்‌ஷன், துப்பாக்கிச் சூடு, மோதல்கள் என அனைத்து அம்சங்களையும் கொண்ட இந்தத் திரைப்படத்திற்கான காத்திருப்பு இனி தான்.