யார் இந்த சோமி அலி?




பாகிஸ்தான் அமெரிக்க பின்னணியை கொண்ட சோமி அலி, மாடல், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகை ஆவார். இவர் பாலிவுட் திரைப்படங்களில் தோன்றியுள்ளார். இருப்பினும், 1997 ஆம் ஆண்டு அவர் நடிப்பை விட்டுவிட்டு தனது வாழ்வை சமூகப் பணிகளுக்காக அர்ப்பணித்தார்.
1991ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியில் கலந்து கொண்ட சோமி அலி, அப்போது சல்மான் கானுடன் காதலில் விழுந்தார். ஆனால், அவர்களது காதல் சில காரணங்களால் நீடிக்க வில்லை.
சோமி அலி 2007 ஆம் ஆண்டு நோ மோர் டீர்ஸ் (No More Tears) என்ற இலாப நோக்கமற்ற லாப நோக்கமற்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு பாலியல் வன்கொடுமை மற்றும் வீட்டு வன்முறை செய்யப்பட்ட பெண்களுக்கு உதவி செய்கிறது.
சோமியின் அமைப்பு பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க முயல்கிறது. வீட்டு வன்முறை மற்றும் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதே இந்த அமைப்பின் நோக்கமாகும். இதுவரை 25,000 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சோமி அலியின் அமைப்பு உதவியுள்ளது.
2009 ஆம் ஆண்டு மக்களுக்கான சேவைகளுக்காக ஜான் எஃப் கென்னடி ஊக்கத்தொகை விருதை சோமி வென்றார். 2018 ஆம் ஆண்டு நியூமெக்ஸிகோ ஆளுநர் மிச்சல் லுகேராண்ட், சோமியை வீட்டு வன்முறை நடுவர் குழுவிற்கு நியமித்தார்.