சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் இரவு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவருக்கு அறுவை சிகிச்சை அல்லாத முறையில் செவ்வாய்க்கிழமை சிகிச்சை அளிக்கப்பட்டது.
விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.