நம் வாழ்வில் புத்தகங்கள் ஒரு அங்கம். அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் புத்தகத்தைத் தவிர்த்து மின்நூல்களின் பங்கு இன்று அதிகரித்து வருகிறது. ஆனால் மின்நூல்களின் பரபரப்புக்கு மத்தியில் புத்தகங்களை மறந்துவிட முடியாது. நாளுக்கு நாள் டெக்னாலஜி வளர்ந்து வந்தாலும் புத்தகத்தின் மதிப்பு குறையாது. ஏனெனில் ஒரு புத்தகத்தின் வாசனை ஒரு மின்நூலுக்கு கிடையாது. மின்நூலில் கிடைக்கும் அனைத்தையும் ஒரு புத்தகத்தில் பெறலாம்.
பொதுவாக ஒரு மின்நூல் படிக்க ஒரு தொலைபேசி அல்லது லேப்டாப் தேவைப்படும். ஆனால் புத்தகத்தைப் பொறுத்தவரை இதுபோன்ற எந்தக் கருவிகளும் தேவைப்படாது. ஆகவே, எங்கு சென்றாலும் எந்த நேரத்திலும் நாம் புத்தகத்தைப் படிக்கலாம்.
புத்தகத்தின் பக்கங்களை திருப்பிப் படிப்பதில் ஒரு இன்பம் உண்டு. ஆனால் ஈ-புக்கில் அந்த சுகத்தைப் பெற முடியாது. எனவே, ஒரு புத்தகம் படித்தால் மட்டுமே கிடைக்கும் அருமை ஈ-புக்கில் கிடைக்காது. மின்நூல்களைப் படித்தால் கண் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் காகிதத்தில் அச்சிடப்பட்ட புத்தகங்களைப் படித்தால் கண் பாதிப்புகள் ஏற்படாது. மேலும் மின்கட்டணம் அதிகமாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில் மின்சாரத்தைச் சார்ந்த ஈ-புக்குகளைப் படிப்பதைவிட மின்சாரம் இல்லாமல் படிக்கக்கூடிய புத்தகங்கள் சிறந்தது.
எத்தனையோ புத்தகங்கள் நம்மை வாழ்க்கையில் சிறந்த முறையில் வாழ வைக்க உதவும். அப்படியாகப் புத்தகங்களைப் படிக்கத் தூண்டும் பழக்கத்தை இன்றே ஏற்படுத்திக் கொள்வோம். ஏனெனில் நூறு நூல்கள் படிப்பதைக் காட்டிலும் ஒரு நூலை நூறு முறை படிப்பது நல்லது.