ஸ்டாண்டர்ட் கிளாஸ் லைனிங் நிறுவனத்தின் பங்குகள் IPO சந்தையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
நிறுவனத்தின் IPO பங்குக்கு ரூ.133 முதல் ரூ.140 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 8-ம் தேதி பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.
IPO தொடங்கப்படுவதற்கு முன்பே சந்தையில் ஸ்டாண்டர்ட் க்ளாஸ் லைனிங் பங்குகள் ப்ரீமியத்தில் விற்பனையானது. ப்ரீமியம் அதிகரித்து வருவதால் இந்த பங்கு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐபிஓ திறக்கப்பட்ட முதல் நாளிலேயே முதலீட்டாளர்களிடையே கடும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 8.54 மடங்கு அதிகமான பங்குகளுக்கு விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.
ஸ்டாண்டர்ட் கிளாஸ் லைனிங் நிறுவனம், பல்வேறு தொழில்களுக்கு கண்ணாடி லைனிங் சாதனங்களை உற்பத்தி செய்து வழங்கி வருகின்றது. நிறுவனத்தின் நிதி நிலை சிறப்பாக உள்ளது மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் நிறைந்து காணப்படுகிறது.